சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன வாக்கிடாக்கி; வாலிபரை அடித்து உதைத்த போலீசார்

Added : மார் 22, 2020
Share
Advertisement
நரிக்குடி: காணாமல் போன வாக்கி டாக்கியை எடுத்ததாக கூறி, பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு சென்ற வாலிபரை போலீசார் அடித்து உதைத்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரை பணி நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நரிக்குடி எஸ்.மறைக்குளத்தைச் சேர்ந்த தனசேகர் மகன் தவக்கண்ணன் 21. நேற்று முன்தினம் காலை பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக

நரிக்குடி: காணாமல் போன வாக்கி டாக்கியை எடுத்ததாக கூறி, பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு சென்ற வாலிபரை போலீசார் அடித்து உதைத்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரை பணி நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நரிக்குடி எஸ்.மறைக்குளத்தைச் சேர்ந்த தனசேகர் மகன் தவக்கண்ணன் 21. நேற்று முன்தினம் காலை பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக அ.முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அன்று மாலை மறுபடியும் சரிபார்ப்பு செய்ய வேண்டி இருப்பதாக எஸ்,ஐ., மணிகண்டன் அழைத்துச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் வராததால், உறவினர்கள் தேடி சென்றனர். போலீசார் சரமாரியாக தாக்கியதில், பலத்த காயமடைந்த தவக்கண்ணன் கதறி அழுதார். உறவினர்கள் கேட்டதற்கு, எஸ்.ஐ., வாக்கி டாக்கி காணவில்லை. தவக்கண்ணன் வந்து போன பிறகுதான், அது காணாமல் போனது. அவனை தவிர வேறு யாரும் ஸ்டேஷனுக்கு வரவில்லை. அவன்தான் எடுத்திருக்க வேண்டும் என விசாரித்தோம் என்று தெரிவித்தனர்.

படுகாயமடைந்த தவக்கண்ணன், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தினர் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சுழி, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.,க்கள் சசிதர், வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் தர்ணா போராட்டம் நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X