சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பரின் தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement

புவனகிரி: புவனகிரி அருகே குடிபோதையில் நண்பரின் தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி தாலுகா மருதுார் அருகே நத்தமேடு அம்மன்கோவில் தெற்குத் தெரு வேல்முருகன் மகன் கார்மேகம் அதேப்பகுதி பாலக்கிருஷ்ணன் மகன் பாலமுருகன் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 20 ம் தேதி மற்றொரு நண்பர் ரகுவரதன் தாயார் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினர்.அப்பகுதியில் இருவரும் குடிபோதையில் தாக்கிக் கொண்டனர். இதை கார்மேகம் தந்தை வேல்முருகன் சமரசம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், வேல்முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயம் அடைந்தவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வேல்முருகன் மனைவி புகாரின் பேரில் மருதுார் சப் இன்ஸ் பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X