பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி 

Added : மார் 22, 2020
Share
Advertisement

மயங்கி விழுந்தவர் மரணம்ஊத்துக்கோட்டை,மார்ச் 23--ஒடிசா மாநிலம், பானிலா கிராமத்தைச் சேர்ந்தவர் கஜாமாஜி, 70. இவர் குடும்பத்துடன், பெரியபாளையம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் சூளையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, இவர், சாலையில் நடந்து சென்றபோது, மயங்கி விழுந்தார்.அவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, இறந்து விட்டதாக கூறினர்.விஷம் குடித்த பெண் பலிஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், சின்னவண்ணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் சவும்யா, 19. அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.கடந்த, 18ம் தேதி வலி அதிகமாக இருந்ததால், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று இறந்தார். இதுகுறித்து, ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மணல் கடத்தியவர்கள் கைதுஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், ஏனம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆரணி ஆற்றுப்படுகையில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு ஹீரோ பைக்கை போலீசார் மடக்கினர். அதில், திருட்டு மணல் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக, பைக்கில் இருந்த, ஏனம்பாக்கம் மெய்யழகன், 26, தொளவேடு சீனிவாசன், 21, ஆகிய இருவரை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X