பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு நிகழ்ச்சி

Added : மார் 22, 2020
Share
Advertisement

நகரி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நேற்று நடந்த மக்கள் ஊரடங்கு நிகழ்ச்சியில், நகரி பகுதியில், மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு நேற்று ஒரு நாள் மக்கள் சுய ஊரடங்கு பிரதமர், மோடியின் அழைப்புக்கு இணங்க, நேற்று, சித்துார் மாவட்டம், நகரி சட்டசபை தொகுதியில், மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.மக்கள், தங்களது வீடுகளிலேயே தங்கி, வெளியே செல்லாமல் இருந்ததால், நகரி, புத்துார் ஆகிய பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.போலீசார் மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, நகரி பகுதியில் சுகாதார ஊழியர்கள் அனைத்து தெரு மற்றும் சாலைகளை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் துாவி, குப்பையை அகற்றினர்.

மாலை, 5:00 மணிக்கு சுகாதார துறை, போலீசார் மற்றும் வருவாய் துறை ஊழியர்களை பாராட்டும் வகையில் மக்கள் தங்களின் வீடுகள் முன், நின்று கைகள் தட்டி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X