பொது செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கு'க்கு மதிப்பளித்து எளிமையாக நடந்த திருமணங்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 'ஊரடங்கு'க்கு மதிப்பளித்து எளிமையாக நடந்த திருமணங்கள்

ஊட்டி:பிரதமரின், 'சுய ஊரடங்கு' உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளித்து, ஊட்டி, குன்னுாரில், இரு திருமணங்கள் மிகவும் எளிமையாக நடந்தன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று, 'சுய ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டது.இந்நிலையில், நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, காந்தி நகரைச் சேர்ந்த மதன்ராஜ், 30, வண்டிசோலை கீழ்லட்சுமி நகரைச் சேர்ந்த ஜெயநந்தினி, 25, ஆகியோரின் திருமணம், வண்டிசோலை நாராயண சுவாமி கோவிலில், நேற்று எளிமையாக நடந்தது; இதில், இரு வீட்டார் மட்டுமே பங்கேற்றனர்.ஜெயநந்தினி கூறுகையில், ''பிரதமரின் சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அதிகாலை, 4:00 முதல், 5:00 மணி முகூர்த்த நேரத்தில், இரு குடும்பத்தைச் சேர்ந்த, எட்டு பேர் மட்டும் பங்கேற்று, எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தோம்,'' என்றார்.20 பேர் பங்கேற்புகுன்னுார் கம்பிசோலை, ராஜ்குமார், 25, கோத்தகிரி நடுஹட்டி, மகாலட்சுமி, 22, ஆகியோரின் திருமணம், நேற்று காலை, 7:00 மணியளவில், இளித்தொரை முத்துமாரியம்மன் கோவிலில், பெற்றோர் மற்றும் உறவினர்கள், 20 பேர் முன்னிலையில் நடந்தது.
இதேபோல, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி புதுாரைச் சேர்ந்தவர் ஜெயராமன், 29; பையர்நாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா, 25; இருவருக்கும் நேற்று காலை, 7:30 மணிக்கு, மணமகன் இல்லத்தில், திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், 'சுய ஊரடங்கு'க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக, நேற்று காலை, 6:30 மணிக்குள் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. முக்கிய உறவினர்கள், 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
சாலையில் திருமணம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று, ஐந்து திருமணங்கள் நடக்க இருந்தன. ஆனால், 'சுய ஊரடங்கு' காரணமாக, நேற்று கோவில் மூடப்பட்டிருந்தது.திருமணத்தை தள்ளிவைக்க மனமில்லாமல், விருத்தாசலம் அடுத்த எருமனுாரை சேர்ந்த சுரேந்தர் - ஆர்த்தி உட்பட, மூன்று ஜோடிகள், கோவில் எதிரில், சாலையோரம் நின்று, திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X