பொது செய்தி

இந்தியா

வெளிமாநில வாகனங்களுக்கு புதுச்சேரி தடை

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி:'வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைய, இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது' என, முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:அண்டை மாநில வாகனங்கள், இன்று முதல், வரும், 31ம் தேதி வரை, புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அண்டை மாநில அரசு வாகனங்களுக்கும் அனுமதியில்லை. புதுச்சேரி அரசின் பஸ்கள், உள்ளூரில் மட்டுமே இயக்கப்படும்.வெளிமாநில பயணியர் வராமல் தடுப்பதற்கு, இரு சக்கர வாகனங்கள் முதல், அனைத்து வாகனங்களில், சுற்றுலா பயணியர் வர தடை விதிக்கப்படுகிறது.மளிகை, காய்கறி போன்ற பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள், உரிய, 'பில்' காண்பித்தால் அனுமதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X