சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், தாத்தா சடலங்களுடன் 3 நாள் இருந்த பேரன் தற்கொலை

Added : மார் 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 தாய், தாத்தா சடலங்களுடன் 3 நாள் இருந்த பேரன் தற்கொலை

திருப்பூர்:திருப்பூரில், தாய், தாத்தா இறந்த நிலையில், சடலங்களுடன் மூன்று நாட்களாக இருந்த பேரனும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர், காங்கேயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரில் வசித்தவர் வெள்ளியங்கிரி, 71. இவரது மகள் அபர்ணா, 46; தனியார் கல்லுாரி பேராசிரியை. இவருக்கு, ஜித்தி, 17, என்ற மகன் இருந்தார்.நேற்று முன்தினம் மாலை, ஜித்தி, கோவையில் உள்ள உறவினர் வினோத் என்பவரை, மொபைல் போனில் அழைத்து, 'தாய், தாத்தா இறந்து மூன்று நாட்களாகிறது' எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், ரூரல் போலீசாருக்கு தகவல் அளித்தார்.போலீசார், வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ஒரு அறையில், அபர்ணா, உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில், வெள்ளியங்கிரியும், இன்னொரு அறையில், ஜித்தியும் துாக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தனர்.
தற்கொலைக்கு முன், மொபைல் போனில், உறவினரிடம் மெல்லிய அழுகுரலுடன் ஜித்தி பேசிய ஆடியோ விபரம்:தாத்தாவும், அம்மாவும் இறந்து, மூணு நாள் ஆச்சு. நானும் சாகப் போகலாம்னு இருந்தேன். என்னால சாக முடியல மாமா. என்ன பண்றதுன்னு தெரியல. அம்மா, என்கூட பேசிட்டு இருக்கும் போதே செத்துட்டாங்க. தாத்தா, அதைப் பாத்துட்டு துாக்கு போட்டுட்டாரு.விஷம் குடிச்சு பார்த்தேன்; துாக்கு போட்டு பார்த்தேன்; கையை அறுத்து பார்த்தேன். ஆனா, சாக முடியல.இப்ப நான் மட்டும் தான் அனாதை. பாட்டி, ஆறு மாசத்துக்கு முன்னாடி இயற்கையாக இறந்தாங்க. அவங்க இறந்ததை யாருகிட்டயும் சொல்லல. இப்ப நான் என்ன பண்றது? எனக்கு பயமா இருக்கு.இவ்வாறு, உருக்கமாக பேசியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்த தகவல்கள்:வெள்ளியங்கிரி, பனியன், நுால் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தம் கோகிலம். மகள் அபர்ணா, திருமணமாகி சில ஆண்டுகளில், கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்தார். பின், கணவர் இறந்து விட்டார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், சொந்த வீட்டை விற்று, ஜெய்நகரில் வாடகை வீட்டில், வெள்ளியங்கிரி, மனைவி, மகள், பேரனுடன் குடியேறினார். சில ஆண்டுகளாக, உறவினர்கள், நண்பர்கள் என, யாரிடமும் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வில்லை.ஆறு மாதங்களுக்கு முன், வசந்தம் கோகிலம் உடல் நலமின்றி இறந்தார். இதை, உறவினர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.இதற்கிடையே, அபர்ணாவும் உடல் நலமின்றி இருந்துள்ளார். 'இருப்பினும், அபர்ணாவும் தற்கொலை செய்து கொண்டாரா என்பது, பிரேத பரிசோதனைக்கு பின் தான் தெரிய வரும்' என்கின்றனர் போலீசார். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
24-மார்-202005:12:40 IST Report Abuse
Siva Kumar கூட்டு குடும்பங்களின் தேவை நம் சமூகத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்திய நிகழ்ச்சி. மனம் மிகவும் பதைபதைக்கிறது.
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
23-மார்-202022:51:24 IST Report Abuse
R chandar Very sad Social security tem should be for all irrespective of e or religion , Government should allocate for good support for family through aadar card tem, implement tem and avoid most unwanted freebies , court should insist government to implement scheme for who ever left alone in family. All family should be given certain amount of cash compensatory support by stopping all subsidies and freebies.This scheme should be optional for the family to choose subsidy or cash support
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-மார்-202022:38:27 IST Report Abuse
Matt P தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது தான், இந்த தற்கொலை முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது. பல தற்கொலைகள் நடந்திருக்கிறது தொழில் நஷ்டத்தால் . தொழில் நஷ்டத்தில் போய் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தவுடனே , புத்தியை உபயோகித்து ,சிக்கனத்தை கடைபிடித்து நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சியுங்கள். இப்படி ஆகிவிட்டஹே என்று ஏங்காதீர்கள். இருந்தாலும் தோல்விகள் ஏற்படலாம். தொழிலை மூடிவிட்டால் ,சமுதாயம் ஏளனப்படுத்துமே என்று நினைக்காதீர்கள். மகனின் தாய்க்கும் வருமானம் வந்திருக்கிறது. மகனும் தாயுமாவது நல்லபடி வாழ்ந்திருக்கலாம். அவனுக்கும் 17 வயது ஆகிவிட்டது. .
Rate this:
TechT - Bangalore,இந்தியா
27-மார்-202018:44:26 IST Report Abuse
TechTfeminism ...தான் கரணம் கடன் இல்லை ...அந்தண் பெண் கணவனை பிரிந்த பேணியம் பேசி ......பெற்றோருக்கு பாரமாக இருந்துள்ளார் ......நன்றாக சிந்தித்து பாருங்கள் ....சுயநல பெண்கள் கல்யாண பந்தத்தை மதிப்பதில்லை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X