சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் திருமண விருந்து

Added : மார் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 மருத்துவமனையில் திருமண விருந்து

கடலுார்:கடலுாரில் திருமணத்திற்கு சமைத்த உணவு, அரசு மருத்துவமனையில், உணவு கிடைக்காமல் தவித்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடலுார், செம்மண்டலம் காந்தி நகரைச் சேர்ந்த, வினோத் பிரபாகருக்கும், விழுப்புரம், கழுப்பெரும்பாக்கம், கோதாவரிக்கும், நேற்று காலை, கடலுாரில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், திருமணத்திற்கு அதிகம் பேர் வரவில்லை. மணமக்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.இதனால், திருமணத்திற்கு சமைத்த உணவு, அதிகளவில் மீதமானது. கடலுார் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்கள், உணவு கிடைக்காமல் தவிப்பதை அறிந்து, உணவை வேனில் ஏற்றிச் சென்று, அவர்களுக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23-மார்-202012:23:28 IST Report Abuse
Rafi நேற்று த த மு க, மற்றும் ஜமாஅத் அமைப்புகள் இணைந்து சென்னை முழுவதும் தண்ணீர் மற்றும் உணவு வழங்கி,சேவை செய்ததை பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க பாராட்டினார்கள். அரசு வெளியூரிலிருந்து வந்து மாட்டி கொண்டவர்கள், அனாதைகளின் நிலையை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை,
Rate this:
Cancel
Raj - Trichy,இந்தியா
23-மார்-202008:28:31 IST Report Abuse
Raj இவ்வாறு உணவினை வீணாக்காமல் மருத்துவ மனையில் கொடுத்து உதவிய அனைவருக்கும் மணமக்களுக்கும் பாராட்டுக்கள் நன்றி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X