சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பின்னலாடைகள் தேக்கம்: தினமும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement
 பின்னலாடைகள் தேக்கம்: தினமும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்:திருப்பூரில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தேங்குகின்றன.
ஏற்றுமதி
'கொரோனா' பாதிப்பு காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு, ஏற்கனவே வழங்கிய ஆடை தயாரிப்பு, 'ஆர்டர்'களை ரத்து செய்துள்ளனர். இதனால், திருப்பூரில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி பாதிப்படைந்துஉள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தற்போது, தமிழக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்புவதும், முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான, 'சைமா' தலைவர், ஈஸ்வரன் கூறுகையில், ''வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுடன், உள்நாட்டுக்கான கோடைக்கால ஆடை தயாரிப்பில், திருப்பூர் நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. வரும், 31ம் தேதிக்குள், வைரஸ் பரவல் தடுக்கப்படும்; வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,'' என்றார்.
சரக்கு போக்குவரத்து
திருப்பூர் சரக்கு போக்கு வரத்து சங்க தலைவர், முருகேசன் கூறியதாவது:திருப்பூரில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு, தினமும், 300 லாரிகள் மூலம், பின்னலாடைகள் அனுப்பப்படுகின்றன.ஏற்கனவே, மஹாராஷ்டிராவுக்கான பின்னலாடை சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அனைத்து மாநிலங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, உள்நாட்டு சந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் திருப்பூரில் தேக்கமடைகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X