சீனாவில் 3 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

பீஜிங்: கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், கடந்த மூன்று நாட்களாக, புதிய நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், புதிதாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.



latest tamil news



இது குறித்து, சீனாவின், தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கை:சீனாவில், நேற்று முன்தினம், புதிதாக, 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். குவாங்சோவை சேர்ந்த ஒருவருக்கு, புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனா பாதிப்பால், ஹூபய் மாகாணத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உள்ளிட்ட ஆறு பேர் இறந்த நிலையில், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை, 3,261 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவின் மையமான வூஹான் நகரில், நான்காவது நாளாக, புதிதாக யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை. நாடு முழுதும், நேற்று முன்தினம் வரை, கொரோனாவால், 81 ஆயிரத்து, 54 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 3,261 பேர் இறந்த நிலையில், 5,549 பேர் சிகிச்சை பெறுகின்றனர்; சிகிச்சைக்கு பின், 72 ஆயிரத்து, 244 பேர் வீடு திரும்பி உள்ளனர்.கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, 1,845 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
24-மார்-202008:39:11 IST Report Abuse
chander உண்மை இல்ல
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
24-மார்-202008:36:45 IST Report Abuse
chander u ......
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-மார்-202000:49:54 IST Report Abuse
Rajagopal சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதி இந்த கொரோனா வைரஸ். இதற்கு முன்பாக அவர்கள் எதுவும் தானாக உண்டாக்கியதில்லை. எல்லாம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கண்டு பிடிக்கப்பட்டு, சீனாவில் உற்பத்தி செய்வதற்காக அமைத்து வந்தார்கள். சீனர்கள் மலை அளவுக்கு உற்பத்தி செய்து குவித்தார்கள். ஆனால் எதுவும் சீனாவில் தோன்றியதில்லை. இதுதான் முதல் முறையாக சீனாவிலேயே உண்டாகி, உற்பத்தியாகி, பரவி, இப்போது உலகெங்கிலும் ஒரு இடம் விடாமல் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. Made in China முத்திரையோடு வந்திருக்கிறது. முகத்திரையை இழுத்தது மூடிக் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X