சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவர் மனைவி தற்கொலை

Added : மார் 23, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: திருமணமனமான மூன்று ஆண்டுகளில், பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வினோத். அரசு பஸ் டிரைவர். இவருக்கும், வேப்பூர் அடுத்த என். நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், 50, மகள் அன்பரசி 23 என்பவருக்கும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.தற்போது விருத்தாசலம் கல்லுாரி நகரில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பரசி தனது குழந்தையுடன் தூங்கச் செல்வதாக அறைக்கு சென்றவர், வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மாமியார் லட்சுமி, மாலை 5:00 மணியவளில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, அன்பரசி துாக்குப் போட்டு கொண்ட அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்பரசியின் தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X