பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020
Share
Advertisement

சிதம்பரம்: கொரோனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சிதம்பரம் நகராட்சியில் குளோரின் கலந்த தண்ணீர் கரைசல் தெளித்து முக்கிய பகுதிகள் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

இந்தியாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு நேற்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது. பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தினர் . இதனையடுத்து சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை பயன்படுத்தி முக்கிய இடங்களை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவே மருந்தாக்கியல் துறை பேராசிரியர்களை உதவியோடு குளோரின், லைசால் மற்றும் கிருமி நாசினி கொண்டு சுமார் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரில் இந்த கரைசல் தயார் செய்யப்பட்டது.நேற்று காலை சிதம்பரம் நகரம் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. அதில் சிதம்பரம் பஸ் நிலையம், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் முற்றிலும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. சிதம்பரம் சப்-கலெக்டர் விசு மகாஜன், நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா முன்னிலையில் பஸ் நிலையம் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சரவணகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.துாய்மை பணியாளர்கள் சிரமமேற்கொண்டு செய்த இப்பணிகளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X