பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கம்போல் இயங்கிய விருதை மீன் மார்க்கெட்

Added : மார் 23, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: மக்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும் விருத்தாசலம் மீன் மார்க்கெட் வழக்கம்போல் நடந்ததால் பரபரப்பு நிலவியது. கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு நேற்று அமலில் இருந்தது. இதனால் பஸ், ரயில் போக்குவரத்துக்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. மேலும் வணிக வளாகங்கள் என அனைத்து தனியார் நிறுவங்களுக்கு மூடப்பட்டிருந்த நிலையில், விருத்தாசலம் தினசரி மீன் மார்க்கெட்டில் மட்டும் ஒரு சில மீன் கடைகள் மட்டும் வழக்கம் போல் இயங்கின. இதையறிந்த பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு படையெடுத்தனர். தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் வந்து எச்சரித்தும், மீன் வியாபாரிகள் கேட்காமல், அதிகாரிகள் வந்து கேட்கும்போது மட்டும் கடையை மூடிவிட்டு, பின்னர் திறந்து வியாபாரம் செய்வதை தொடர்ந்தனர். இதைறிந்த நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து கடையை மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனால் வேறு வழியின்றி, கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் சென்றனர். பின்னர், அப்பகுதியில் நகராட்சி ஊழியர்கள், கிருமி நாசினி தெளித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X