சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் அவசியமின்றி சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு

Added : மார் 23, 2020
Share
Advertisement
 ஊரடங்கில் அவசியமின்றி சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு

சிதம்பரம்: நேற்று நடந்த மக்கள் ஊரடங்கு வேண்டுகோளை மீறி கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது காவல் துறையினர் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு செய்ய மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனால் நேற்று தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடியது.நேற்று சிதம்பரம் பகுதிகளில் அவசியமின்றி வெளியே வந்த வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிதம்பரம் கீழ வீதி, பஸ் நிலையம், மேலவீதி, கஞ்சித்தொட்டி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கீழ வீதியில் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், வாகனங்களை நிறுத்தி விசாரணை செய்தனர். சிதம்பரம் சரககத்திற்குட்பட்ட சிதம்பரம் நகரம், தாலுகா, அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், புவனகரி, கிள்ளை, மருதுார் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டதுடன், அரசு தடையை மீறி ஏன் வெளியே வந்தீர்கள் என கேள்வி எழுப்பி, கண்டித்தனர்.மேலும் அனைத்து வாகனங்கள் மீது வழக்கு பதிந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதில் சிதம்பரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என டி.எஸ்.பி., கார்த்திகேயன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X