பொது செய்தி

தமிழ்நாடு

பூவராக சுவாமிக்கு வரவேற்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்: கிள்ளையில் நடந்த மாசி மக தீர்த்தவாரிக்கு சென்ற பூவராகசுவாமிக்கு ஸ்ரீமுஷ்ணம் எல்லையில்மக்கள் ஊரடங்கு காரணமாக ஒருநாள் முன்பாகவே சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த மார்ச் 1ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 24 நாட்கள் நடந்த உற்சவத்தில் உற்சவர் யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூதேவியோடு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் கடந்த 9ந்தேதி கிள்ளை கடற்கரையில் நடந்த சமுத்திர தீர்த்தவாரிக்குப் பிறகு, தொடர்ந்து புவனகிரி, ராமாபுரம், கவரப்பாளையம் வழியாக நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வர வேண்டும்.ஆனால் மத்திய அரசு திடீரென அறிவித்த மக்கள் ஊரடங்கு காரணமாக ஒருநாள் முன்பாகவே நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கூட்டம் அதிகமாக கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலோருக்கு தெரியாமல் குறைந்த அளவிலான பக்தர்ககளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு ஏற்பாடுகளை செயல் அலுவலர் நரசிங்கபெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமாலை, சண்முகம் ஆகியோர் செய்திருந்தார்.மக்கள் ஊரடங்கு காரணமாக பூவராகசாமியும் ஒரு நாள் முன்பாகவே தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்ததாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X