பொது செய்தி

தமிழ்நாடு

'கிருமிநாசினியுடன் வாஷ்பேஷன்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

கடலுார்; கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, கடலுார் கலெக்டர் அலுவலகம் வருபவர்கள் கை கழுவ, கிருமிநாசினியுடன் கூடிய வாஷ்பேசின் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்ளில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறகைள் இயங்கி வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் அதிக அளவில் வருகின்றனர். அலுவலகம் வரும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைருக்கும், கிருமிநாசினி கையில் தெளிக்கப்பட்டு கை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. யாருடைய உதவியுடன் இன்றி, அவர்களாகவே, கைகை சுத்தம் செய்வதற்கு வசதியாக, கிருமிநாசியடன் கூடிய 'வாஷ்பேசின்' கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சில்வர் மெட்டலில் செய்யப்பட்டுள்ள அந்த வாஷ்பேசினில், மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும், கை முட்டியால் திறக்கும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. கையால் குழாயை திறந்தால் கிருமிநாசினி மற்றவர்களுக்கு பரவும் என்பதால் இந்த ஏற்பாடு.கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பல்வேறு அரசு அலுவலங்களிலும் இதபோன்ற வாஷ்பேசின் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X