சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தனமாக மதுவாங்க குவிந்த குடிப்பிரியர்கள்: போலீசை கண்டதும் ஓட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; கொரோனா பாதிப்பு காரணமாக டாஸ்மாக் விடுமுறை விடப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் மதுவாங்க குவிந்த குடிபிரியர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நேற்று 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக குடிப்பிரியர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், விருத்தாசலம் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் பின்புறம், பஸ் நிலையம், ராமச்சந்திரன்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வழக்கம்போல் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.இரவு 7:00 மணிக்கு மேல், கிராமங்களை சேர்ந்த குடிப்பிரியர்களும் மதுவாங்க படையெடுக்கத் துவங்கினர். இரவு 8:00 மணியளவில், ரயில்வே ஜங்ஷன் - எருமனுார் இணைப்பு சாலையில் மர்ம நபர்கள் சிலர், கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்தனர்.இது காட்டுத்தீ போல பரவியதால், நகரில் மதுபானங்கள் தேடி அலைந்து பலரும், எருமனுார் சாலையில் மதுவாங்க நுாற்றுக்கும் மேற்பட்டோர் படையெடுக்கத் துவங்கினர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சென்றதும், அங்கு திரண்டிருந்த அனைவரும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அவர்களுடன் மது விற்பனை செய்த நபர்களும் தப்பியோடினர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X