பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய நபர்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: மக்கள் ஊரடங்கு வேண்டுகளை மீறி வெளியே வந்த பொது மக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

நாடு முழுவதும் நேற்று காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. காலையில் பால், நாளிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு , பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மாலை 5:00 மணியளவில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் விதமாக, வீடுகளில் வெளியே வந்து கைகளை தட்டி நன்றி தெரிவிக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.மக்கள் ஊரடங்கின் போது சப் கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் கவியரசு, டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ராஜதாமரை பாண்டியன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு ஆகியோர் அவரவர் அரசு வாகனங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர். இந்நிலையில், இரவு 7:00 மணிக்கு மேல், பொது மக்கள் பைக், கார் போன்ற வாகனங்களில் உலா வர துவங்கினர். பாலக்கரை ரவுண்டானா, பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் உலா வந்தவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X