பொது செய்தி

தமிழ்நாடு

ஜார்கண்ட் தொழிலாளரை தனிமைப்படுத்த அறிவுரை

Added : மார் 23, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி அருகே, கணியாம்பூண்டியில் பனியன் நிறுவனம் உள்ளது; இங்கு பணிபுரிவதற்காக ஜார்கண்டில் இருந்து, 23 பெண் தொழிலாளர்கள், நேற்று ரயில் மூலம், திருப்பூர் வந்திறங்கினர்.இவர்கள் கூட்டமாக வந்து இறங்கியதை அடுத்து, இங்கு கண்காணிப்பு பணியில் இருந்த மாவட்ட பொது சுகாதாரப் பிரிவினர், இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.அதன்படி, அவிநாசி பொது சுகாதார பிரிவு வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள், அப்பெண் தொழிலாளர்களை, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.பின், திருமுருகன்பூண்டியில் உள்ள நிறுவன விடுதிக்கு, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொது சுகாதாரப் பிரிவினர் கூறியதாவது;வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அந்த அடிப்படையில், ஜார்கண்டிலிருந்து வந்த, பெண் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு வைரஸ் தொற்று எதுவுமில்லை.இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும், 31ம் தேதி வரை, அவர்களது விடுதியில், உரிய உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து, தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பொது சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெற்ற பிறகே, அவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என, நிறுவன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X