பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி இல்லாமல் குழி; ஒப்பந்ததாரருக்கு அபராதம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:அனுமதியின்றி குழி தோண்டப்பட்டதன் பேரில், மூன்று, ஒப்பந்த தாரர்களுக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாயாக, 'சென்டேஜ்' தொகை செலுத்த மின்வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூரில், குறிப்பிட்ட சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள், மற்ற இடங்களில், மின் கம்பம் மூலம், 'டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்' உதவியுடன், மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது.இவற்றில், மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் உள்ளன. குறிப்பாக, தரையில், இரண்டடி ஆழம் பள்ளம் தோண்டி, மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் தொலைதொடர்பு கேபிள்களை புதைவடமாக அமைக்கவும், ரோட்டோரத்தில் குழிகள் தோண்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், இந்த பணியின் போது, மின்வாரியத்திடம் உரிய அனுமதி பெறப்படுவது கிடையாது. மாறாக, குழிகள் தோண்டப்படுவதால், மின் கம்பம் அருகில், பதிக்கப்பட்ட மின் கேபிள்கள் வெளியே தெரிகின்றன. ஒரு சில பகுதிகளில், மின் இணைப்பும் துண்டிக்கப்படுகிறது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.இந்நிலையில், அனுமதியின்றி குழி தோண்டப்பட்டதன் பேரில், மூன்று, ஒப்பந்ததாரர்களுக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாயாக, 'சென்டேஜ்' தொகை செலுத்த, மின்வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின் கேபிள்கள், பூமியின் ஆழத்தில் புதைத்து, பராமரிக்கப்படுகிறது.அதேபோல், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர் ஆகியவை தெரு ஓரங்களில் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுபணிகள் மற்றும் தொலைத்தொடர்பு பணிக்காக குழிகள் தோண்டப்படும்போது, முன் அனுமதி பெறுவதில்லை.இதுவரை, மூன்று ஒப்பந்ததாரர்களுக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாய் வீதம் சென்டேஜ் தொகை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், ஒருவர் மட்டுமே தொகை செலுத்தியுள்ளார். அசம்பாவிதம் விபத்து மற்றும் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க, உரிய அனுமதி பெற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X