பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் ஊழியரிடம் 'ஸ்மார்ட்' கார்டு வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:தாராபுரம் தாலுகா, மீனாட்சிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில், விற்பனையாளராக மலையரசி என்பவரும், கட்டுனராக ரகுபதியும் பணியாற்றி வருகின்றனர்.அந்த கடையில், பயனாளிகள் பெயரில் அரிசி எடுத்து, மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.அரிசி கடத்துவதாக புகார் எழுந்ததால், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அதில், விற்பனையாளரிடம், 21 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் இருந்துள்ளது. கார்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.மாவட்ட வழங்கல் அலுவலர் முருகனிடம் கேட்ட போது, ''தாராபுரத்தில், வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வின் போது, விற்பனையாளரிடம், 21 கார்டுகள் இருந்துள்ளது. மின்தடை என்பதால், கார்டுதார்கள் பதிவு செய்ய வழங்கி சென்றதாகவும், முறைகேடு நடக்கவில்லை என்றும், விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், விற்பனையாளர் ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வைப்பதும் குற்றம். இதுகுறித்து, வட்ட வழங்கல் அலுவலர் விசாரித்து, அறிக்கை அளிப்பார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X