பொது செய்தி

தமிழ்நாடு

மடிந்த உயிர்கள்... மனதில் ஆறாத ரணங்கள்! இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே

Added : மார் 23, 2020
Share
Advertisement
 மடிந்த உயிர்கள்... மனதில் ஆறாத ரணங்கள்! இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே

விடுமுறையில், ஊட்டிக்கு செல்ல லாம்,' என கனவுகளின் புறப்பட்ட, அந்த மாணவர்களுக்கு தெரியவில்லை, இதுதான் நமது கடைசி பயணம் என்று. வாழ வேண்டிய வயதில், மரணத்தை தழுவிய வாலிபர்களின் பெற்றோரின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வதென்று தெரியவில்லை.
கடந்த, 19ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு, அவிநாசி அருகே பழங்கரை பைபாஸ் ரோட்டில், கல்லுாரி மாணவர்கள், ஊட்டிக்கு சென்ற கார், சிமென்ட் லாரியில் மோதிய விபத்துக்குள்ளானதில், ஆறு மாணவர்கள் உயிரை இழந்தனர்.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, சத்தி, கோபி, பெங் களூரு, மைசூரு என பிற மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அவிநாசியில் இருந்து செல்ல முடியும். 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவை நிறைந்த அவிநாசி பைபாஸ் ரோட்டில், வாகனங்கள் மின்னல் வேகத்தில் பயணிப்பதை தொடர்ச்சியாக பார்க்க முடியும்.இது ஒருபுறமிருக்க, 'அவிநாசி ரோட்டில், அடிக்கடி விபத்து நடக்குதாமே' என்ற பேச்சுக்கு, அவிநாசி பைபாஸ் ரோடு ஆளாகியிருக்கிறது.அவிநாசி பைபாஸ் ரோட்டில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இரண்டு சாலை விபத்துகள்.
பலியானவர் எண்ணிக்கை 25."அடிக்கடி ஏற்பட்ட சாலை விபத்தில சின்னப்பசங்க அடிபட்டு இறக்கறாங்களே; அவங்க குடும்பம் என்ன பாடுபடும்" இப்படிப்பட்ட அனுதாப வார்த்தைகளை, சமீபகாலமாக அடிக்கடி கேட்க முடிகிறது."அவ்வளவு அழகா, ஆறு வழிச்சாலை போட்டிருக்காங்க; கொஞ்சம் கவனமா போய் இருக்கலாம்...' ஒரு பக்கம் இப்படியொரு விவாதம்.'ரோட்ல போட்டிருக்கிற மைய தடுப்பு சரியில்ல; அதனால தான் வண்டிங்க, அடிக்கடி விபத்துல சிக்குது...,' மறுபக்கம் இப்படியொரு சர்ச்சை.'நைட் நேரத்துல, துாக்க கலக்கத்துல, பல பேர் வண்டி ஓட்றாங்க.
அதுதான் விபத்துக்கு முக்கிய காரணம்...' இன்னொரு பக்கம் இப்படியொரு ஆதங்கம்.ஒரு விபத்துக்கு, ஓராயிரம் காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும், வாகன ஓட்டுனர்களின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் தான், விபத்துக்கு விடை கொடுக்கும் ஒரே தாரக மந்திரம் என்பதை மறுப்பதற்கில்லை.அவிநாசி நெடுஞ்சாலைத்துறை சார்பில், சுவர் முழுக்க விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன."நாம் நினைத்தால் விபத் துகளை தவிர்க்கலாம்; அதிவேகப் பயணம் உயிரை கொல்லும்', 'ஆக்சிலேட்டர், அளவான வேகத்திற்கு மட்டுமே; அதிவேகத்திற்கு அல்ல' என்பது போன்ற வாசகம் உண்மையில் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. இவை படிப்பதற்கு மட்டுமல்ல; பின்பற்றுவதற்கும்தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X