பொது செய்தி

தமிழ்நாடு

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு!

Added : மார் 23, 2020
Share
Advertisement
 சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு!

இயற்கையும் இயற்கை சார்ந்த விஷயங்களுக்கு வெகுதொலைவில் வந்துவிட்டதால்தான் 'கொரோனா' போன்ற விஷக்கிருமிகளுக்கு பயந்து இன்று வீட்டில் அடைப்பட்டு கொண்டிருக்கிறோம்.இயற்கையை நேசிக்க மறந்து மனிதத்தை இழந்த ஒவ்வொருவருக்கும் இயற்கை கொடுக்கும் பதிலடி எப்படியிருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.
இப்படியான இயற்கையின் வளத்தை சுட்டிக்காட்டுவதில் சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இதற்காகவே, மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. வானம்பாடியாய்த் திரிந்து கானம் பாடிய குருவிகளை காண்பதே அரிதாகிவிட்ட இந்த சூழலில் அதற்கென ஓரிடம் ஒதுக்கிதன் வீட்டையே வானம்பாடியாய் மாற்றியிருக்கிறார் திருப்பூரை சேர்ந்த பறவை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ரவீந்திரன்.அவரிடம் பேசியதிலிருந்து...சிட்டுக்குருவி மனிதர்களோடு அண்டி வாழ பழகிவிட்ட ஒரு பறவையினம். அடர் காடுகளில் வாழ்வதில்லை. மனிதர்கள் வேண்டாம் என்று விட்டெறியும் தானியங்களை உண்டு, நம்முடைய ஓட்டு வீடுகளின் கூரை இடுக்குகளில் கூடுகட்டி வாழும் பறவை. எந்த சிட்டுக்குருவியும் மரங்களில் கூடு அமைத்ததில்லை. இன்று கூரை வீடுகளெல்லாம் சதுர கட்டடங்களாக மாற ஆரம்பித்துவிட்டன.அடுக்கு மாடி குடியிருப்புகளும் பெருகிவிட்டன. இந்த கான்கிரீட் கட்டடங்களில் கூடுகட்டுவதற்கு ஏதுவான இண்டு இடுக்குகள் இல்லாததால், சிட்டுக்குருவிகள் தங்கள் வாழ்விடத்தை இழக்க ஆரம்பித்தன. இன்றும் நகர்புறத்தின் அருகில் ஓட்டு வீடுகளில் சிட்டுக்குருவிகளை எளிதில் காணமுடியும். இவற்றை மீட்க முடியும் என்றால் நிச்சயம் முடியும்.வீட்டில் உயரமான சுவரில் சிறிய மரப்பெட்டிகளை வைத்தால் போதும். சிட்டுக்குருவிகள் அதனுள் வைக்கோலால் கூடமைத்து முட்டையிட்டு இனவிருத்தி செய்யும். மரப்பெட்டி வைத்த உடனே குருவிகள் வராது. அதற்கு எந்த இடையூறும் இல்லையென உறுதிசெய்த பின்னரே கூட்டினை தேர்வு செய்யும்.
கூடுதலாக மரப்பெட்டி வைத்த இடத்தின் அருகில் சிறு தானியங்களை போட்டு வைத்தால், தாய்க்குருவிகள் உணவாக உட்கொள்ளும்.ஆனால் குஞ்சுகளுக்கு புரதச்சத்து நிறைந்த பூச்சி புழுக்களைத்தான் உணவாக ஊட்டும். எங்கள் வீட்டில் வைத்துள்ள இந்த பெட்டியில் இதுவரை, 6-7 முறை இனப்பெருக்கம் நடந்துள்ளது. குறிப்பாக, எங்கள் வீட்டின் அருகில் செல்போன் டவர் உள்ளது. வீட்டின் மாடியில் பூஸ்டர் கருவியும் உள்ளது. இருந்தும் சிட்டுக்குருவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.நீங்களும் வீட்டுக்கொரு சிட்டுக்குருவி கூடுகளை அமைக்கலாம்... செய்வீர்களா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X