பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கட்டுப்பாட்டு அறை 'பிஸி' 'கொரோனா' சந்தேகங்களுக்கு பதில்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதால், தினமும் ஏராளமானோர் தொடர்புகொள்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா குறித்த சந்தேகங்களுக்கும், புகார்களுக்கும் வசதியாக, மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், 0421 1077 என்ற கட்டணமில்லா எண்களுடன், கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.அலுவலர்கள் மூன்று 'ஷிப்ட்' முறையில் பணியாற்றுவதால், 24 மணி நேரமும், கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தினமும் தொடர்புகொண்டு, காய்ச்சல் பாதிப்பு, கொரோனா பாதிப்புகள் குறித்து, சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றனர்.அரசு அலுவலர்கள், பொதுமக்கள் நலனுக்காக, கலெக்டர் அலுவலக வரவேற்பு அறை அருகே, சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அங்கு, 'இன்பரா ரெட் தெர்மா மீட்டர்' மூலமாக, ஒவ்வொரு நபர்களின் காய்ச்சல் அளவு பரிசோதிக்கப்படுகிறது. கைகளை கழுவ சோப்பு திரவம் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.தேவையெனில், கைகளை சுத்தம் செய்து கொள்ள, 'சானிடைசர்' என்ற கிருமிநாசினி திரவமும் வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழையும், ஒவ்வொருவரும், இதுபோன்று கைகளை சுத்தம் செய்த பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X