பொது செய்தி

தமிழ்நாடு

புது கணக்கு பயன்பாடு  குறைகிறது

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொழில் நிறுவனங்கள், வர்த்தக நடைமுறைகளுக்கு, நிதியாண்டை மட்டுமே பயன்படுத்துவதால், புத்தக கடைகளில், பதிவேடு கணக்கு புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளனநிதியாண்டு, ஏப்ரல் - மார்ச் வரையிலான காலத்தை குறிக்கிறது. ஒரு தொழிலுக்கு புதுக் கணக்கு துவங்கும் நாளாக, ஏப்ரல் முதல் தேதி உள்ளது. பொதுத்துறை வங்கிகள், பெரிய நிறுவனங்கள், மட்டுமல்லாமல் வரி செலுத்தும் சிறு வணிகர்கள் கூட இந்த நாளில் புதுக்கணக்கு துவக்குகின்றனர். திருப்பூரில், பின்னலாடை மற்றும் சார்பு நிறுவனங்கள் அனைத்துமே, வர்த்தக நடைமுறைகளுக்கு, நிதியாண்டை மட்டுமே பயன்படுத்துகின்றன.இதனால், நோட்டு புத்தகக் கடைகளில், பதிவேடு கணக்கு நோட்டுகள் அதிகளவில் தருவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால், பதிவேடுகளின் பயன்பாடும் குறைந்து வருகிறது.புத்தக கடை உரிமையாளர்கள் கூறுகையில், '2019--20ம் நிதியாண்டுக்கான கணக்குகள் அனைத்தும் முடிக்கப்படவுள்ளன. ஏப்., முதல் தேதியில் இருந்து, அனைத்து நிறுவனங்களிலும் புதுக்கணக்கு துவக்கும் நிகழ்வு நடத்தப்படும். ஆன்லைன் மயமாகி வரும் நிலையில், புதிய கணக்கு பதிவேடுகளை வைத்து, வழிபாடு நடத்தப்படுவதும் உண்டு. ஆண்டுதோறும், கணக்கு பதிவேடுகளின் விற்பனையும் குறைந்து வருகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X