பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி கரைசல் தெளிக்கும் பணி திண்டிவனம் சப்கலெக்டர் துவக்கி வைப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், நகரம் முழுவதும் கிருமிநாசினி கரைசல் தெளிக்கும் பணியை, சப்கலெக்டர் துவக்கி வைத்தார்.

திண்டிவனம் நகராட்சி சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலுள்ள தெருக்கள், பஸ் நிலையம், மார்க்கெட் வீதி உள்ளிட்ட பல இடங்களில் கிருமி நாசினி கரைசல் தெளிக்கும் பணியை, சப்கலெக்டர் அனு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில், நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், உதவி பொறியாளர் தேவநாதன், நகர அமைப்பு ஆய்வர் கோகுலகிருஷ்ணன், பணி ஆய்வர் ஆரோக்கியமிகிமை நாதன், டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து நகராட்சியின் மூன்று வாகனங்கள் மூலம், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கிருமிநாசினி கரைசல் தெளிக்கும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X