பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கமா நேற்று வந்ததோ எண்பதே பேர்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:சுய ஊரடங்காக அறிவிக்கப்பட்ட நேற்று தேவையின்றி மருத்துவமனைகளில் குவியாமல் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், புறநோயாளிகள் பிரிவில், 3,500 பேர் வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, 80 பேர் மட்டுமே வருகை புரிந்திருந்தனர்.இது, 2.5 சதவீதமாகும். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி கூறுகையில், 'பிரதமரின் சுய ஊரடங்கு வேண்டுகோளை ஏற்று, திருப்பூர் மாவட்ட மருத்துவமனைகளில், நோயாளிகளின் வருகை வழக்கத்துக்கு மாறாக முற்றிலும் குறைந்து காணப்பட்டது.மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும். அலட்சியம் கூடாது. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X