பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் காய்ச்சல் எதிரொலி வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்; கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் நகராட்சி சார்பில், பஸ் நிலையம், ரயில்நிலையம், மார்க்கெட், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லைசால் கரைசல் தெளிக்கப்படுகின்றது. இதேபோல், திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களில், பயணிகள் உட்காரும் இடம் உள்ளிட்ட இடங்கள், ஆட்டோ ஸ்டேண்டுகளில் லைசால் கரைசல் இயந்திரம் மூலம் ஸ்பிரே செய்யப்படுகின்றது.இதேபோல் நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே வரும் பொதுமக்கள் கைகளை சோப்பு ேபாட்டு கழுவிவிட்டு வருவதற்கான வாஷ் பேசின் வைக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து திண்டிவனத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதை முன்னிட்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நுழைவாயிலிலேயே தடுக்கப்பட்டு, அவர்களின் கைகளில் சானிட்டைசர் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இதேபோல், திண்டிவனத்திலும் டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் நிலையங்களிலும், கைகளை கழுவிய பிறகே உள்ளே வருவதற்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது.தாலுகா அலுவலகத்தில்நோய் பரவும் அபாயம்திண்டிவனத்திலுள்ள தாலுகா அலுவலகத்திற்கு, தினந்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசின் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.இவர்களின் கைகளை சுத்தம் செய்து உள்ளே அனுப்புவதற்கு எந்த வித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.நுழைவாயிலில் கொரோனா எச்சரிக்கை போர்டு மட்டுமே உள்ளது. வங்கிகள், போலீஸ் நிலையங்களில் வைத்துள்ளது போல், கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X