பொது செய்தி

தமிழ்நாடு

காதர்பேட்டை வெறிச்சோடியது

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரின் ஆடை வர்த்தக மையமான காதர்பேட்டை, நேற்று வெறிச்சோடியது.திருப்பூரில், ரயில்வே ஸ்டேஷன் அருகே, உள்ளூர் ஆடை வர்த்தக மையமான காதர்பேட்டை செயல்படுகிறது. அப்பகுதியில், சில்லரை, மொத்த ஆடை வர்த்தகம் செய்யும், 700 கடைகள் உள்ளன.குழந்தைகள், சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான அனைத்து பின்னலாடைகள்; பேன்ட், சர்ட் உள்ளிட்ட ஓவன் ஆடை ரகங்கள் விற்பனை இங்கு செய்யப்படுகிறது. திருப்பூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினரும்கூட, காதர்பேட்டை கடைகளில் ஆடைகள் வாங்குகின்றனர்.வெளிமாவட்டம், வெளிமாநில வர்த்தகர்கள் மொத்தமாக ஆடைகளை வாங்கிச்செல்கின்றனர். மக்கள், வர்த்தகர்கள் வருகையால், வாரத்தின் அனைத்து நாட்களிலும் காதர்பேட்டை பகுதி களைகட்டும். 'கொரோனா' அச்சுறுத்தலால், கடந்த இரண்டு வாரங்களாக, காதர்பேட்டைக்கு ஆடை வாங்கவருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.ஊரடங்கை பின்பற்றி, நேற்று, காதர்பேட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.மக்கள் நடமாட்டமின்றியும், ஆடை வாங்க கூவி அழைக்கும் வியாபாரிகள்; விலை குறைத்து கேட்கும் மக்களின் ஓசையின்றி, வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X