பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் வந்த 500 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை

Added : மார் 23, 2020
Share
Advertisement
 ரயிலில் வந்த 500 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை

திருப்பூர்:வெளி மாநிலங்களில் இருந்து, திருப்பூருக்கு ரயிலில் வந்த, ஆயிரம் பேருக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது.சுய ஊரடங்கால் நேற்று காலை, 4:00 மணிக்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இரண்டு பிளாட்பார்ம்களில் உள்ள நான்கு கவுன்டர்களும் மூடப்பட்டன; ஊழியர்கள் வெளியேறினர்.முன்னதாக, அதிகாலை, 2:00 மணிக்கு சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டது. தட்கல் புக்கிங் அலுவலகம் மூடப்பட்டது. அனைத்து பயணிகள் ரயில்களும்ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு பயணத்தை துவக்கிய, மங்களூரு - சென்னை சென்டரல், மங்களூரு - சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம், திருப்பூர் இரண்டாவது பிளாட்பார்ம் வந்தது. 35 பேர் திருப்பூரில் இறங்கினர்.அதே நேரம், கோவை மார்க்கத்தில் முதல் பிளாட்பார்முக்கு இரு தினங்களுக்கு முன் புறப்பட்ட பாட்னா - எர்ணாகுளம், கவுகாத்தி - திருவனந்தபுரம், ஜம்முதாவி - திருவனந்தபுரம் ரயில்கள் வந்தன. நேற்று இரவு சென்னையில் புறப்பட்ட சென்னை எழும்பூர் - மங்களூரு ரயில் வந்தது.வடமாநில ரயிலில் மட்டும், 400க்கும் அதிகமானோர் வந்திறங்கினர். பிளாட்பார்மில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் மொத்தம், 500 பயணிகளை பரிசோதித்தனர். சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டனர்.பஸ், ஆட்டோ, கால்டாக்சி இயங்காத நிலையில் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த பலர், திருப்பூரில் உள்ள தங்கள் உறவினர், நண்பர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் இருப்பிடம் திரும்பினர்.பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கிய, 135 பேர் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், ஏழு பேருக்கு லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரிச்சிபாளையம் தலைமை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.அரசு டாக்டர்கள் கூறுகையில், '99 டிகிரிக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால், அவர்களை பரிசோதித்து மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. அவர்கள் எங்கிருந்து வந்தனர். எங்கு செல்கின்றனர் மற்றும் சுயவிவரம், செல்போன் எண் பெறப்பட்டுள்ளது.அடுத்தடுத்த நாட்களில் இவர்களின் உடல்நிலை நிலவரம் குறித்து கேட்டறியப்படும். தேவையிருப்பின் தனிமைப்படுத்தப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X