சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்பனை ஏழு பேர் கைது

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; வீட்டில் பதுக்கி வைத்து சாராயம், மது பாட்டில் விற்ற ஏழு பேர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில்,போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த திருமுண்டீச்சரம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் ஜெயசந்திரன்,60; அரிராமன் மனைவி ரேவதி,28; செல்லதுரை மனைவி அரசாயி,55; ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல், சரவணம்பாக்கத்தில் அழகுநாதன் மனைவி சந்திரா, 50; அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அய்யனார்,28; பாவந்துார் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் சிவா,32; வளையம்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை,52; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயம், 18 மது பாட்டில்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X