பொது செய்தி

தமிழ்நாடு

மண் பானைகள் விற்பனை அதிகரிப்பு 

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், கோடை துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது, பகலில், 36 முதல், 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படுகிறது.அதேமயம், பலரும், வீடுகளில் குளிர்ந்த குடிநீரை குடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.பிரிட்ஜை தவிர்த்து, மண்பானையில் வைக்கப்படும் தண்ணீரை பெரிதும் விரும்பிக் குடிக்கின்றனர். இதனால், மண்பாண்டங்கள் சார்ந்த பொருட்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.மண்பாண்ட வியாபாரிகள் கூறுகையில், 'மண்பாண்ட கடைகளில் வழக்கத்துக்கு மாறாக விற்பனை அதிகரிக்கிறது. மண் பானைகளை பொதுமக்கள் அதிகம் வாங்குகின்றனர். இவை, வடிவமைப்புக்கு ஏற்ப, 50 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தற்போது, சிறுவர், சிறுமியர் விரும்பும் மண்பாட்டில்கள் அதிகம் விற்கப்படுகிறது. மண்பாண்ட பொருட்களை பயன்படுத்துவோர் சோப் உபயோகித்து அவற்றை கழுவக்கூடாது. மேலும் மாதம் ஒருமுறை மண்பாண்ட பொருட்களை வெயிலில் காய வைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X