முள்வேலி அமைத்த தகராறு நான்கு பேர் மீது வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முள்வேலி அமைத்த தகராறு நான்கு பேர் மீது வழக்கு

Added : மார் 23, 2020
Share
கள்ளக்குறிச்சி: கீழ்நாரியப்பனுாரில் விளைநிலத்தில் முள்வேலி அமைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்நாரியப்பனுாரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,71; இவர், தனது விளைநிலத்தில் முள்வேலி அமைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன்,32; மற்றும் அவரது தரப்பை சேர்ந்த

கள்ளக்குறிச்சி: கீழ்நாரியப்பனுாரில் விளைநிலத்தில் முள்வேலி அமைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்நாரியப்பனுாரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,71; இவர், தனது விளைநிலத்தில் முள்வேலி அமைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன்,32; மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சிலர் பொதுபாதையை மறித்து முள்வேலி அமைத்துள்ளதாக கூறி சுப்ரமணியனை அசிங்கமாக திட்டி, தாக்கியுள்ளனர்.இது குறித்து சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் கீழ்நாரியப்பனுாரை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன்,32; பெரியசாமி மனைவி அங்கம்மாள், பச்சமுத்து மனைவி சரசு, ஆதிமூலம் மனைவி வேலாயி ஆகிய நான்கு பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து அதில் ராஜேந்திரனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X