தமிழ்நாடு

'தனித்திருந்தோம்... விழித்திருந்தோம்!' கொரோனாவை விரட்ட விலகியிருந்து ஒற்றுமை காத்த மக்கள்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020
Share
Advertisement
 'தனித்திருந்தோம்... விழித்திருந்தோம்!' கொரோனாவை விரட்ட விலகியிருந்து ஒற்றுமை காத்த மக்கள்

திருப்பூர்:பின்னலாடை நகரான திருப்பூரில் நேற்று'சுய ஊரடங்கை' பொதுமக்கள், முழுமையாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் கடைபிடித்தனர்.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, பிரதமர் மோடி அழைப்பை ஏற்று, நாடுமுழுவதும் நேற்று காலை 7:00 மணி முதல் ஒருநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச்சேர்ந்த 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டினருக்கு ஆடைகளைத் தயாரித்து தரும் திருப்பூர், எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.வாகன போக்குவரத்தால், நகரில் பெரும்பாலான ரோடுகள், எந்நேரமும் நெரிசல் மிகுந்து காணப்படும். உணவகங்கள், வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதும். ஊரடங்கை பின்பற்றும் வகையில் நேற்று, மக்கள் வீடுகளை விட்டுவெளியேறவில்லை. ஞாயிறு விடுப்பு, ஊரடங்கு காரணமாக, ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவனங்கள் திறக்கப்படவில்லை.மளிகை, ஜவுளி, உணவகங்கள், நகை கடை உட்பட அனைத்துவகையான வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.
மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் மட்டும் இயங்கின.பயணியர், சரக்கு வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. கடையடைப்பு, வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி, திருப்பூர் -- தாராபுரம், அவிநாசி, மங்கலம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பிரதான சாலைகள் உட்பட அனைத்து ரோடுகளும் வெறிச்சோடின. அவசர தேவைகளுக்கு மட்டும் சிலர் டூவீலர், காரில் செல்வதை காணமுடிந்தது.
பல்லடம், அவிநாசி, பொங்கலுார், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உட்பட மாவட்டம் முழுவதும், சுய ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.அசைவம் 'கட்'ஞாயிறு என்றாலே, திருப்பூர் வாசிகள் அசைவ உணவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்களும் இயங்கவில்லை. அதனால், மக்கள் சைவ உணவுக்கு மாறிவிட்டனர்.
பாலுக்கு தட்டுப்பாடுஆவின் தவிர மற்ற அனைத்து பால் நிறு வனங்களும் விற் பனையை நிறுத்தியதால், காலை நேரத்தில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆவின் மையங்களில், வரிசையில் காத்திருந்து மக்கள் பால் வாங்கினர்.தனித்திரு... விழித்திரு'தனித்திரு... விழித்திரு' என்பார் வள்ளலார். 'கொரோனா' பிடியில் இருந்து காக்க, தனித் திருத்தலும், விழிப்புணர்வுடன் இருத்தலும் அவசியமாகிறது. 'சுய ஊரடங்கு, நாங்கள் தனித்திருக்கவும், விழித்திருக்கவும் உதவியது. இனி இது எங்களுக்கு சாத்தியமே கொரோனாவை விரைவில் விரட்டுவோம்' என்று கூறுகிறார்கள், பொதுமக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X