அடுக்கம் காப்புக்காட்டில் உலக வனநாள் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்கம் காப்புக்காட்டில் உலக வனநாள் கொண்டாட்டம்

Added : மார் 23, 2020
Share

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் வனச்சரக அலுவலகத்தில் உலக வனநாள் தினம் கொண்டாடப்பட்டது.

கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் காப்புக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள,அடுக்கம் வனச்சரக அலுவலகத்தில் உலக வனநாள் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி விழுப்புரம் ரேஞ்சர் பாபு,அடுக்கம் வனக்குழுத்தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் நர்சரி பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.முன்னதாக வனவர் ரேஞ்சர் பாபு தலைமையில்,வனவர் ரவிக்குமார் முன்னிலையில் காடுகளை காப்பதுகுறித்தும்,கொரானோவைரஸ் தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பது குறித்தும் வன ஊழியர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் வனக்காப்பாளர்கள் சுரேந்தர்,ஸ்ரீகுறிஞ்சி,கோவிந்தன்,,வனக்காவலர்கள் ஆறுமுகம்,ரவிச்ந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X