பொது செய்தி

தமிழ்நாடு

சந்தையில் காய்கறிகள் தேக்கம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 சந்தையில் காய்கறிகள் தேக்கம்

திருப்பூர்:திருப்பூர் தென்னம் பாளையம் மார்க்கெட்டில் நேற்று 1.5 டன் காய்கறிகள் தேக்கமடைந்தன.வழக்கமாக, அதிகாலை, 2:00 மணி முதல், 7:00 மணி வரை திருப்பூர் தெற்கு உழவர் சந்தையும், 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை தென்னம்பாளையம் மார்க்கெட்டும் செயல்படும்.சுய ஊரடங்கு அறிவிப்பால் நேற்று உழவர் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது. 450 விவசாயிகள், 5,000 வாடிக்கையாளர்களும் வரவில்லை. கேட் இழுத்து மூடப்பட்டு சந்தை வெறிச்சோடியது.அதே நேரம், ஞாயிறு விற்பனையை எதிர்பார்த்து தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, 4:00 மணிக்கு இரண்டு டன் காய்கறிகளை வியாபாரிகள் கொண்டு வந்தனர். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து பலரும் காய்கறி வாங்கி செல்வர்.நேற்று சொற்ப அளவிலான வாடிக்கையாளர்களே வந்தனர். ஒன்றரை டன்னுக்கு அதிகமான காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமாகின. காய்கறிகளை அப்படியே சாக்கு போட்டு மூடி வைத்தனர். மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த முட்டைக்கோஸ், முள்ளங்கி, தக்காளி காலை, 10:00 மணிக்குள் அழுகிய நிலைக்கு வந்தது.மீன் மார்க்கெட் நேற்று யாருமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இருதினங்களுக்கு முன் ஆர்டர் மூலம் பெறப்பட்ட மீன்கள் கன்டெய்னரில் இருந்து இறக்கப்படாமல் ஐஸ் சகிதமாக அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இன்று விடுமுறைஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையும் மாட்டுச்சந்தை தென்னம்பாளையத்தில் நடைபெறும். கேரளா மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்நிலையில், இன்று நடக்கவிருந்த சந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X