பொது செய்தி

தமிழ்நாடு

குடிக்க மறக்காத 'குடி'மகன்கள்!

Added : மார் 23, 2020
Share
Advertisement
 குடிக்க மறக்காத 'குடி'மகன்கள்!

திருப்பூர்:சுய ஊரடங்கால், திருப்பூரில், நுாறு சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் வீட்டினுள் இருந்தனர். பிரதான ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.இச்சூழலில், பி.என்., ரோடு சாந்தி தியேட்டர் அருகில் 'டாஸ்மாக்' மதுக்கடை பார், மில்லர் பஸ் ஸ்டாப் அருகே, காலேஜ் ரோடு உள்ளிட்ட இடங்களில் பார்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை ஜோராக நடந்து வந்தது.குடிமகன்கள், பாருக்குள் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். ஒரு குவார்ட்டர், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மதுவிற்பனையை போலீசார் கண்டுகொள்ளவில்லை.பல்லடம்பல்லடத்தில் நேற்று மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதும், விதிமுறை மீறி மது விற்பனை நடந்தது. போலீசாரும் அதை தடுக்கவில்லை.ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால், பெரும்பாலானோர், அன்று அசைவத்தையே நாடுகின்றனர். நேற்று காலை 7:00 மணிக்கு பின்பும், சில இறைச்சி, மற்றும் மீன் கடைகள் திறந்திருந்தன.நகராட்சி அதிகாரிகள் சோதனைக்கு பின், கடைகள் மூடப்பட்டன. பல்லடம் நகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், சில மளிகை கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், அரசு உத்தரவை மீறி திறந்திருந்தன. இச்செயல், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நாட்டு நலனில் அக்கறை கொள்ளாத சிலர், ஊரடங்கை மீறி வியாபாரம் மேற்கொண்டனர். சமூக சிந்தனை இல்லாமல், அரசின் உத்தரவை மீறியவர்களின் செயல், அவர்களது சுயநலத்தையே காட்டுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X