பொது செய்தி

தமிழ்நாடு

ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி கொரோனா விழிப்புணர்வு முகாம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம், ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரியில் ரத்ததானம் மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.விழுப்புரம் ேஹால்ட் லயன்ஸ் சங்கம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து ரத்ததானம் மற்றம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரியில் நடைபெற்றது. இதில், ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஆர்.ஆர்.சி., ஓய்.ஆர்.சி., அமைப்புகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.மாவட்ட ேஹால்ட் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுநர் சரவணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சங்கர் முன்னிலை வகித்தார்.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர் சுப்ரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி, கொரோனா வைரஸ் தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்துகளை, மாணவர்கள் மத்தியில் செயல்முறை விளக்கமளித்தனர்.ரத்த வங்கி டாக்டர்கள் கோமதி, அசோக்குமார் தலைமையில் குழுவினர், பங்கேற்றோரை பரிசோதனை செய்து, ரத்தம் சேகரித்தனர். இதில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆறு ஆசிரியர்கள் 88 யூனிட் அளவிற்கு, ரத்ததானம் செய்தனர்.ஏற்பாடுகளை, என்.சி.சி., அலுவலர் முத்துக்குமரன், என்.எஸ்.எஸ்., அலுவலர் வாசு, ஓய்.ஆர்.சி., அலுவலர் எழிலரசன் ஆகியோர் செய்திருந்தனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணக்கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X