கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது

Added : மார் 23, 2020
Share
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், மேற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், விராட்டிக்குப்பம் பாதையில் ரோந்து சென்ற போது, அங்கு, கையில் பையோடு நின்றிருந்த

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், மேற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், விராட்டிக்குப்பம் பாதையில் ரோந்து சென்ற போது, அங்கு, கையில் பையோடு நின்றிருந்த நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில், 1 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்த போலீசார், மாம்பழப்பட்டு ரோடு, ஸ்டாலின் நகர், பாண்டியன் மகன் பாலாஜி,23; வீரப்பன் மகன் மலர்ராஜ்,18; விராட்டிக்குப்பம் பாதை, வேணு மகன் ராமகிருஷ்ணன்,21; ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X