பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: மயிலம் எம்.எல்.ஏ.,மாசிலாமணி கோரிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்: மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று, சட்டமன்றத்தில் மயிலம் எம்.எல்.ஏ.,பேசினார்.

சட்டமன்றத்தில் நடந்த கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கையின் போது, தி.மு.க.,வை சேர்ந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,மாசிலாமணி பேசியதாவது:மயிலம் சட்டமன்ற தொகுதி, வல்லம் ஒன்றியம் வடவானுார் கிராமத்தில் கடந்த 3.9.19ல் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் இறந்தனர். 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் 68 வீடுகள் சேதமடைந்தது. விபத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று நான்காவது ஆண்டாக வலியுறுத்தி வருகிறேன். மயிலம் ஒன்றிய அரசு மருத்துவமனையை 30 படுக்கைககள் கொண்ட மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும். இதேபோல், வீடுரில் ஆரம்ப சுகாதார நிலையமும், கால்நடை மருந்தகமும் அமைக்க வேண்டும்.மயிலம் ஒன்றியம் பெரியதச்சூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும். பாதிராபுலியூரில் பழமை வாய்ந்த சிவன்கோவில், கைலாச நாதர் கோவிலை புனரமைத்து தர வேண்டும். மயிலம் தொகுதியிலுள்ள திருவம்பட்டில் கால்நடை கிளை மருந்தகம் அமைக்க வேண்டும்.சின்னநெற்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும், பள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், வைரபுரம் கிராமத்திலுள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மயிலம் ஒன்றியம் சங்கராபுரம் ஆற்றில் கட்டப்பட்டிருக்கின்ற தடுப்பணையை சீரமைக்க வேண்டும். நட்டார்மங்கலத்தில் புறக்காவல் நிலையமும், வெள்ளிமேடுப்பேட்டில் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்.திண்டிவனத்திலுள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி, பொன்விழா ஆண்டில் கோவிந்தசாமியின் நினைவை போற்றுகின்ற வகையில், கலையரங்கம் அமைக்க வேண்டும். வீடுர் அணையை துார்வாரி, சுற்றுலாத்தளமாக அமைக்க வேண்டும்.நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மயிலம் ஒன்றியத்தில் 22 கிராமங்களில் நியாயவிலைக்கடைகள் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு சட்டமன்றத்தில் மாசிலாமணி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X