பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்-6': 2 லட்சம் மரம் நட திட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 'வனத்துக்குள் திருப்பூர்-6': 2 லட்சம் மரம் நட திட்டம்

திருப்பூர்:ஐந்து திட்டங்களில் பெற்ற அனுபவங்கள், 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டமாக விஸ்வரூபம் எடுக்குமென, 'வெற்றி' அமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மரம் வளர்க்கும் இயக்கமாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கப்பட்டது, வெற்றி அமைப்பின் இத்திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 2015 முதல் இதுவரை, எட்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.ஐந்து திட்டங்கள் வாயிலாக நட்ட மரக்கன்றுகளில், 90 சதவீத கன்றுகள், மரங்களாக அடர்ந்த வனம் போல் வளர்ந்துள்ளன.ஆறாவது திட்டத்துக்கும், வெற்றி அமைப்பும், பசுமை ஆர்வலர்களும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான, நாற்றுகள் உற்பத்தி ஆண்டிபாளையம் கிளாசிக் பார்ம்ஸில் நடந்து கொண்டிருக்கிறது.உலக வன நாளான நேற்று முன்தினம், வெற்றி அமைப்பினர், வனத்துக்குள் திருப்பூர் -6 திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. உலக வன நாளையொட்டி, புதிய மரக்கன்றுகள் உருவாக்கும் பணி நடந்துள்ளது.இதுகுறித்து 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் கூறியதாவது:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நடப்பட்ட கன்றுகள், மரமாக வளர்ந்து விட்டன. ஆறாவது திட்டத்தில், புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஆறாவது திட்டம் மூலம், 2020 நிறைவில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டிருப்போம். வேம்பு, நாவல், இலுப்பை, செம்மரம், வாகை, குமிழ், மலைவேம்பு மற்றும் தேக்கு மரங்கள் அதிகம் இடம்பெறும்.காயா, சிவப்பு பலா, திசு வளர்ப்பு தேக்கு மரங்கள் வைக்க, ஆலோசனை மட்டும் வழங்கப்படும். ஐ.எப்.ஜி.டி.பி., வழிகாட்டுதல் மூலம், சவுக்கு மற்றும் கடம்பு மரத்தை, சோதனை முறையில், தலா, 10 ஆயிரம் கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம்.டி.என்.பி.எல்., நிறுவனத்தின் வழிகாட்டுதல் மூலம் சுபாபுல், அகோசியா, தைலம் ஆகிய மரங்களும் நடப்படும். இவ்வகை மரங்கள் காகித கூழ் தயாரிக்க, மூன்று முதல், ஐந்து ஆண்டுகளில் பலன் அளிக்கும். உயர்ரக திசு வளர்ப்பு நாற்றுகளை வாங்கி, நடவு செய்யப்படும்.குடியிருப்பு பகுதிகளில், பழவகை நாற்றுகளும் நடப்படும். சீதா, பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, அகத்தி, பெருநெல்லி, அறநெல்லி, கறிவேப்பிலை ஆகிய நாற்றுகள் வழங்கப்படும். இதுவரை நிகழ்த்திய ஐந்து திட்டங்களின் பெற்ற அனுபவத்தின் விஸ்வரூபமாக, வனத்துக்குள் திருப்பூர் -6 திட்டம் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X