பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

செஞ்சி: செஞ்சி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை சந்திக்கின்றனர். குறிப்பாக நடத்துனர்கள் பயணிகளிடம் பணங்களை பெறும் போது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இதை கருத்தில் கொண்டு, செஞ்சி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு செஞ்சி வர்த்தகர் சங்கம் சார்பில் கையுரை, சோப் ஆயில், குளியல் சோப்பு, மருந்து தெளிப்பதற்கான ஸ்பிரேயர், மாஸ்க் ஆகியவற்றைவழங்கினார்.இந்தப் பொருட்களை வர்த்தக சங்கத் தலைவர் செல்வராஜ் பணிமனை கிளை மேலாளர் கோதண்டராமனிடம் ஒப்படைத்தார்.இதில், வர்த்தகர் சங்க செயலாளர் வெங்கட் கௌரவத் தலைவர் கலியமூர்த்தி, துணைத்தலைவர் ராஜகோபால், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் ஷபீர், � ராம் பத்மநாதன், செல்வானந்தம், ஆனந்தன், மணிலா வர்த்தகர் சங்கம் நிர்வாகி செல்வம், போக்குவரத்து கழக மேற்பார்வையாளர்கள் தனசிங், ஜெயக்குமார் போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், ஓட்டுனர், நடத்துனர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X