சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

Added : மார் 23, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை: அண்ணனை கத்தியால் தாக்கியது தொடர்பாக தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.வளத்தி அடுத்த சாத்தனந்தல் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் அனுமந்தன், 40; இவரது தம்பி ஆனந்து, 33; இவரிடமிருந்து ் சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டரை சவரன் நகையை வாங்கி, அனுமந்தன் அடகு வைத்துள்ளார்.நகையை மீட்டு தரும்படி ஆனந்து, கடந்த 20 ம்தேதி அனுமந்தனிடம் கேட்டுள்ளனர்.இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆனந்து தரப்பினர், அனுமந்தனின் தலையில் கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் ஆனந்து மனைவி சரண்யா, 28; உள்ளிட்ட 4 பேர் மீது வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆனந்து, 33; பாலாஜி 35, பிரகாஷ் 26 ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X