சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை

Added : மார் 23, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் கொத்தனார் கிணற்றில் இறந்து கிடந்தது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேல்மலையனுாரில் சிவனருள் மண்டபம் பின்புறம் தங்கவேலு மகன் தனசேகரன் என்பவரது நிலத்தில் விவசாய பாசன கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலை 9 மணியளவில், ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள்,, கிணற்றில் கிடந்த உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.இது குறித்து வளத்தி போலீசார் விசாரணை நடத்தியதில், செஞ்சியை சேர்ந்த நரசிம்மன் மகன் ராமன், 29 என்பவர் மேல்மலையனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் கொத்தனார் பணிக்காக வந்துள்ளார். இவர் 2 தினங்களாக வீடு திரும்பவில்லை.இந்நிலையில் ராமன் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது, குறித்து, வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X