சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி காலையில் கைது: மதியம் விடுதலை

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:அதிகாரிகள் குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்த விவசாயியை, காலையில் கைது செய்த காங்கயம் போலீசார், மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.காங்கயம், ராயர்வலசை சேர்ந்தவர் கந்தசாமி, 45. தனது நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த இவர் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தார். 'விவசாயியின் அனுமதி பெற்ற அவரது நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும்,' என, கோர்ட் அறிவுறுத்தியது.கடந்த ஜனவரியில் நிலத்தில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், நிலத்தை விட்டு அதிகாரிகளை வெளியேற்றினார். கந்தசாமி அதிகாரிகளை மிரட்டியதாக காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் மின் தொடரமைப்பு அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். வயதான தனது தாயாரை தாக்கியதாக கந்தசாமியும் போலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.தற்காலிகமாக மின்கோபுரம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் கைவிட்டு இருந்தனர். இச்சூழலில் நேற்று கந்தசாமி வீட்டுக்கு சென்ற காங்கயம் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி, கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்த பின் அங்கிருந்து, உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.அங்கு போலீசார், மின்வாரிய அதிகாரிகள் 'என் மீது பொய் புகார் கூறி கைது செய்திருப்பதாக கூறி, தரையில் படுத்து கந்தசாமி உருண்டார். மதியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கந்தசாமியை அழைத்து வந்த போலீசார் மாலையில் விடுதலை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X