பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார், திருப்பாலப்பந்தல் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதி கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்புவதற்கான அனுமதி கிடைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.திருக்கோவிலுார் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் இருந்து மிக அருகாமையில் இருக்கும் பகுதிகளான திருப்பாலப்பந்தல், எறையூர், மாடம்பூண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலைக்கு, கரும்பை பதிவு செய்ய சர்க்கரை ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.இதன் காரணமாக விவசாயிகள் பயிர் செய்த கரும்பை பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தரணி ஆலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு இப்பகுதி விவசாயிகள் ஆளாகி இருந்தனர்.தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பிற்கான தொகையை முறையாக வழங்காமல் பலமாதங்கள் இழுத்தடித்து வந்தது. கடந்த ஆண்டு கொள்முதல் செய்த கரும்பிற்கு 23 கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக விவசாய சங்கங்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலாவிடம் புகார் தெரிவித்திருந்தனர்.கலெக்டர், ஆலை நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. ஆலையும் இயங்கவில்லை. இதன் காரணமாக கரும்பு பயிர் செய்த விவசாயிகள் 12 மாதங்களைக் கடந்தும் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.விவசாயிகளின் நிலைமையை உணர்ந்த கலெக்டரின் தீவிர நடவடிக்கையால், தரணி சர்க்கரை ஆலையில் பதிவு செய்த கரும்பை கள்ளக்குறிச்சி- 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மாற்றி விட நடவடிக்கை மேற்கொண்டார்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையும் சமீபத்தில் மூடப்பட்டது. இதன் காரணமாக 30,000 டன் கரும்பை வெட்ட முடியாமல் திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் தவித்து வந்தனர்.இதுகுறித்து அனைத்து விவசாய சங்கத்தினர் திருக்கோவிலூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு அருகில் இருக்கும் திருப்பாலப்பந்தல், எறையூர், மாடாம்பூண்டி, ரிஷிவந்தியம் பகுதி கரும்புகளை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் அரவை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.இதன் அடிப்படையில் கலெக்டர் கிரண்குராலா எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக, சர்க்கரை ஆணையம், திருக்கோவிலூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு அருகாமையில் இருக்கும் விவசாயிகளின் 30 ஆயிரம் டன் கரும்பை அரவை செய்ய உத்தரவு வழங்கியுள்ளது.இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக திருப்பாலப்பந்தல், எறையூர், ரிஷிவந்தியம், மாடாம்பூண்டி பகுதி விவசாயிகள் அறுவடை செய்யும் கரும்பை பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.கரும்பு அறுவடை செய்த 14 நாட்களில் அதற்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முறையாக செலுத்திவிடுவது, ஆலைக்கு அருகாமையில் விவசாய நிலங்கள் இருப்பதால் கரும்பை பண்ணாரி அம்மன் ஆலைக்கு எடுத்துச் செல்வதில் எளிதாக இருப்பதால் வரும் நாட்களில் இப்பகுதியை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் நிரந்தரமாக கொண்டு வர சர்க்கரை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பி ஓராண்டு ஆகியும் பணம் கிடைக்காத நிலையில், கரும்பு அனுப்பிய இரண்டு வாரத்திற்குள் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.தற்போது டைவட்டிங் செய்யப்பட்ட பகுதிகள் பண்ணாரி அம்மன் ஆலைக்கு அருகாமையில் இருப்பதால் கரும்பை ஆலைக்கு விவசாயிகள் அனுப்ப வசதியாக இருக்கிறது.விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த கலெக்டர், சர்க்கரை ஆணையம், தமிழக அரசிற்கு அனைத்து விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X