பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு சென்று திரும்பியவரா... தகவல் தெரிவிக்க உத்தரவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:'கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பியவர் தங்களது தகவல்களை தெரிவிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிக்கை:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நோய் வெளிநாட்டில் இருந்து பரவியதால், வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த ஒரு மாதத்தில் திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் இருப்பின், அவர்கள் தாங்களாகவே முன்வந்து பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும்.கலெக்டர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் அவசர கால கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0421 2971199 மற்றும் 1077 என்ற எண்ணில் அழைக்கலாம். தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், உடல்நலம் குறித்து அறிந்து தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் இந்நடவடிக்கை முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X