பொது செய்தி

தமிழ்நாடு

'மக்கள் ஊரடங்கிற்கு' பொது மக்கள் நன்றி

Added : மார் 23, 2020
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் டாக்டர்களுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் கொரோனா வைரஸ் பற்றி கவலைபடாமல் பொதுமக்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை உள்ளிட்டோருக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் டாக்டர்களுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் கொரோனா வைரஸ் பற்றி கவலைபடாமல் பொதுமக்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை உள்ளிட்டோருக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதன் காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், பேரூராட்சி துறையினர், பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டினர்.மேலும் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை, தீயணைப்பு நிலையங்கள், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனத்தில் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒலி எழுப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X