ஒளிர் மின் விளக்குகள் பழுது ஒலக்கூரில் விபத்து அபாயம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒலக்கூர் சந்திப்பில் பொருத்தப்பட்ட ஒளிர் மின் விளக்குகள் பழுதாகியுள்ளதால், விபத்துக்கள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், நான்கு வழிச்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக நெடுஞ்சாலையின் முக்கிய சந்திப்புக்களில், ஒளிர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட சென்னை-திருச்சி தேசிய நெடுங்சாலைகளிலும், புதுச்சேரி-திண்டிவனம்தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஒளிர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதே போன்று திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் சந்திப்பில் ஒளிர் மின் விளக்கு பொருத்தப்பட்டது.அதனை எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத்தார். தொடர்ச்சியாக 24 மணி நேரமும் எச்சரிக்கும் வகையில் எரிந்த ஒளிர்மின் விளக்குகளால், விபத்துக்கள் குறைந்து வந்தது.ஒளிர் மின் விளக்குகள் எரிவதை உணர்ந்து, வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். தற்போது, ஒலக்கூர் சந்திப்பில் உள்ள ஒளிர் மின் விளக்குகள் எரியதாததால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சீர் செய்ய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X