பொது செய்தி

தமிழ்நாடு

'கிளாஸ்' இல்லாவிட்டால் என்ன...

Added : மார் 23, 2020
Share
Advertisement
 'கிளாஸ்' இல்லாவிட்டால் என்ன...

கோவை:'மாணவர்களுக்கு விடுப்பு விட்டாச்சு; பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு என்ன வேலை...' என, ஒருபுறம் புலம்பல் சத்தம் கேட்க, மறுபுறம் அமைதியாக, வகுப்பறையை வண்ணமயமாக்கி, 'மாஸ்க்' தைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்.'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 31 வரை, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டுமென, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மாணவர்கள் இல்லாத வகுப்பறையில், எங்களுக்கு என்ன வேலை என, ஆசிரியர்கள் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.இது ஒருபுறமிருக்க, பள்ளியை மேம்படுத்தும் பணியில், ஈடுபட்டு வருகின்றனர், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்.மொத்தம், 320 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள், ஆறு அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வகுப்பறைகளை வண்ணமயமாக்கும் பணியில், அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பள்ளியில், பெற்றோருக்கு கற்றுத் தர, தையல் சிறப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்குள்ள இயந்திரங்களில், தையல் பயிற்சி கற்ற ஆசிரியர்கள், 'மாஸ்க்' தயாரிக்கின்றனர். ஒரே நாளில், 40 'மாஸ்க்'குகள் தயாரிக்கப்படுகின்றன.முதல்கட்டமாக, ஆசிரியர்கள் பயன்படுத்த, 'மாஸ்க்'குகள் தைக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில், மாணவர்களுக்கும் தயாரித்து, பள்ளி அருகாமையில் இருப்போருக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.-- -மைதிலிதலைமையாசிரியை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X